இன்றைய நாளை கையாள்வது எப்படி ?

இந்த கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்திலும் உள்ள வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் வணிகர்/வணிகங்களுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . அரசாங்கம் தக்க நிவாரண பணிகளுடன்  தேவையானதைச் செய்யும் என்றாலும் ,  நம் வணிகம் மற்றும்  குடும்பத்தின்  அடுத்த 3/6/9/12 மாதங்களில் நமக்கு ஏற்படக்கூடிய கடினமான காலங்களைத் திட்டமிடுவது  மிக முக்கியம், இது போன்ற தீவிரமான  திட்டமிடல் நம்மை  ஒரு பேரழிவிலிருந்து காப்பாற்றும்.

காலத்தின் வீழ்சியையோ அதன் ஆழத்தையோ கணிக்க முயற்சித்து இந்த  நிச்சயமற்ற தன்மையைக் மேலும்  கடினமாக்கி கொள்ள வேண்டாம் .

ஒரு  அடிப்படை பொது அறிவுடன் இதை ஒப்பிட்டு பார்ப்போம் .

  • தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சரியாக திட்டமிடுங்கள் –   உகந்தது 80/60 / 40%  மற்றும் அல்லாதது 75/50 / 25%  என்று  விகிதத்தில் செயல்படுத்துங்கள்.
  • காசே தான் கடவுள் –  எந்த வகையிலும் அதைப் பாதுகாக்க முயற்சியுங்கள் ,  அது உங்களை தேடி வரும்பொழுது விட்டுட்டுவிடாதீர் .
  • அனைத்து வகையான மூலதன செலவினங்களையும் மற்றும் விருப்பப்படி செலவழிப்பதை  தவிருங்கள் 
  • நிலையான செலவுகளை  சுருக்கி மற்றும் மாற்றங்களை முயற்சிக்கவும்
  • ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை அமைத்து , அலுவலக இடங்களை சிறிய அளவில் திட்டமிடுங்கள்
  • லாபத்தில் கவனமாக இருங்கள், இது வணிக வளர்ச்சி குறித்து யோசிக்கும் நேரம் இல்லை .
  •  அதிகப்படியான சரக்குகளை வைத்துக்கொள்ளாமல் , தேவைப்படுவோருக்கு முடிந்தவரை விற்று விட முயற்சியுங்கள். 
  •  தயாரித்து ரெடி நிலையில் இருக்கும் சரக்குகளை  முடிந்த அளவு , ஆர்டர்கள் இருந்து ஆனால் தயாரிக்கும்  திறன் இல்லாதவர்க்கு விற்க முயலுங்கள் .
  • நாம் எல்லாருமே ஒரு கண்ணுக்கு புலப்படாத  பொதுவான எதிரியுடன் போராடுகின்றோம் , ஆகவே  சக  போட்டியாளர்களுடன் ஒத்துழைப்புடன் இருங்கள்  (எ.கா. தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரு  குழுவாக சேர்ந்து வாங்குதல் போன்றவை ).
  • நீங்கள் B 2 B அல்லது B 2 C  இல் இருந்தால், வெளியே சென்று உங்களால் இயன்ற இடங்களில் பட்டியல் இட்டு ஒரு குழுவை ஏற்படுத்துங்கள்,  கடினமான காலங்களில் இது பெரிய அளவில் கைகொடுக்கும் .
  •  நீங்கள் B 2 C போன்ற  பிராண்டட் தயாரிப்புகளை டீல் செய்பவராக இருக்கும் பட்சத்தில் , B 2 B யில் இருப்பவர்களுக்கு விவரதுணுக்குகளை தரலாம் , இது பணப்புழக்கத்தை மேலும்  உறுதிப்படுத்தம் .
  •  ஒருவரின் அதிகப்படியான செலவில் லாபம் பெற முயற்சிக்காதீர்கள், நேர்மையான வழியில் சாத்தியப்படும் ஒப்பந்தங்களை கடைபிடியுங்கள் . இதுவே ஒரு நீண்ட காலத்திற்கு உதவும் .
  • முடிந்த அளவுக்கு உங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களை காப்பாற்றுங்கள் ,  ஊழியர்களின் வேலை நிறுத்தலுக்கு பதிலாக சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கலாம் .
  • போனஸ் மற்றும் அனைத்து சலுகைகளையும் ஒத்தி வைக்கலாம் .
  • உங்களது ஊழியர்களுக்கு நீங்கள் குழு காப்பீடு எடுக்கலாம் அல்லது அவர்களை காப்பீடு எடுக்க சொல்லலாம் .
  • எதையும் பெரிதாக மதிப்பிடமால் , மூலதனத்தை மிகவும் கவனமாக கையாளுங்கள் .
  • START – UP’s மற்றும் MSME – களுக்கு அரசாங்கம் அறிவித்ததிட்டங்கள்  , இது வரை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அவற்றை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள் .
  • வங்கி சலுகைகளை பெற இந்த சமயத்தில் முயற்சியுங்கள். வங்கி கடனுக்கு இது வரை வட்டி செலுத்தி இருந்தால் அசல் மீது தடை பெற முயலுங்கள்.
  • அரசாங்கம் எந்த வரி விலக்கும் அளிக்காத வரை சட்டத்திற்கு உட்பட்டு , வரிகளை தவறாமல் செலுத்துங்கள் .
  • இந்த நெருக்கடியை  ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி மேலும் உங்களை மேம்படுத்தி பயன்பெறுங்கள் .

குறிப்பு: இந்த பதிவில் உள்ள அனைத்தும் திரு . ராம்கி தனிப்பட்டவெளிப்படுத்திய  கருத்துகள் முற்றிலும் தனிப்பட்டவை ஆகும் .  ஸ்பார்க் மூலதனத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.

இப்படிக்கு

திரு. கே.ராமகிருஷ்ணன் (ராம்கி )

டை சென்னை – Charter Member.

மூத்த நிர்வாக இயக்குநர் –  திட்டமுறை உறவுகள்

ஸ்பார்க் கேபிடல் அட்வைசர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்.

https://chennai.tie.org/crisis-help-desk/

Leave a Comment