TiE for Employees , எந்தவொரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அவர்களின் அறிவு , வேலைத்திறன் மற்றும் அணுகுமுறையை மேம்படுத்தவும் , அவர்களின் செயல்திறன், உற்பத்தித்திறனை ஊக்கப்படுத்தவும் TiE சென்னையின் முன்முயற்சி .
பயிற்சி அமர்வின் வழிகாட்டுதல்கள்:
- அமர்வுகள் அனைத்தும் zoom‘ல் மட்டும் .
- அமர்வுகள் TiE Chennai யால் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் .
- இந்த பயிற்சி திட்டத்திற்கு தங்கள் ஊழியர்களை பரிந்துரைக்க விரும்பும் பணியளிப்போர் அல்லது இப்பயிற்சி திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் தனி நபர்கள் , ஊழியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள google படிவத்தை நிரப்பி அனுப்பவேண்டும்.
- பணிஅளிப்பவர்களும்/பணி செய்பவர்களை மேற்பார்வை செய்பவர்களும் இப்பயிற்சி திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறோம் . இதனால் உங்கள் ஊழியர்கள் அவர்கள் கற்றவற்றை செயல்படுத்தத் தொடங்கும் போது அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதனை பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு இருக்கும்.
- அமர்வின் போது பங்கேற்பாளர்கள் எந்த ஒரு கவனச்சிதறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கைபேசியை silent mode’ல் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
- பங்கேற்பாளர்களின் வீடியோ கேமரா எல்லா நேரங்களிலும் இயங்க வேண்டும் மற்றும் ஆடியோ முடக்கத்தில் (mute) இருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த விரும்பினால், உங்களின் உள்பெட்டியில் கைஉயர்த்தி
சின்னத்தை அழுத்தவும் . உடனடியாக உங்களின் ஆடியோவை நாங்கள் unmute செய்வோம் .
- ஒரு நபருக்கு ஒரு பதிவு மட்டும் . உங்களுக்கு அனுப்பப்படும் உள்நுழைவு விவரங்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- இத்திட்டத்தின் முழுமையான பயனை பெற உங்களின் வருகை கட்டாயமாகும் .
- சரியான நேரத்திற்கு அமர்வுக்கு வரவேண்டும் .
பயிற்சி திட்டத்தின் உள்ளடக்கம் :இப்பயிற்சி திட்டம் முழுவதும் தமிழில் இருக்கும் . கீழ்குறிப்பிட்ட உள்ளீட்டுகளுடன் மற்றும் பல விஷயங்களை நிர்வகித்தலும் அடங்கும் .
- நேரம்
- செயல்திறன்
- உற்பத்தித்திறன்
- தனிப்பட்ட உறவுகள்
- வாடிக்கையாளர் உறவுகள்
- தொடர்பு திறன்
- தனிப்பட்ட மாற்றம்
- மற்றும் இன்னும் பல
சந்திப்பு ஒவ்வொரு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை. பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த விரும்பி அவர்கள் TiE சென்னை குழுவுக்கு தெரிவித்தால், திங்கள் கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு நேரம் வழங்கப்படும்.பயிற்சி கால அளவு :6 மாதம் – திங்கள் மற்றும் வியாழன் ஒரு மணி நேரம் .பயிற்சியின் முடிவில் முதலாளிகள் /பங்கேற்பாளர்கள் பெரும் பயன்கள் என்ன?
- பங்கேற்கும் ஒவ்வொரு பணியாளரைப் பற்றிய சுய மதிப்பீட்டு கேள்வித்தாள் மற்றும் ஒரு முதலாளி சுய மதிப்பீட்டு கேள்வித்தாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு எங்களால் நிர்வகிக்கப்படும்
- பயிற்சியின் மூன்றாம் மாதம் இடையிலும் , பயிற்சியின் முடிவிலும் இந்த கேள்வித்தாள்கள் பங்கேற்பாளர்கள் மற்றும் முதலாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் .
6 மாத பயிற்சிக்கான கட்டணம் பயிற்சி திட்டத்தின் முழு காலத்திற்கும் ஒரு நபருக்கு 1,000 + ஜிஎஸ்டி (ரூபாய் ஆயிரம் மட்டும் மற்றும் ஜிஎஸ்டி). இடையில் விலகுபவர்களுக்கு கட்டணம் திருப்பி தரபட மாட்டாது .மேலும் விவரங்களுக்கு உங்கள் கேள்வியை 9384009614 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யவும்.Google படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 24 ஜூன் 2020 ஆகும்.
https://forms.gle/zyb7UqQDuSSmtdP86( தனிப்பட்ட பங்கேற்பாளர்களுக்கான படிவம் )
https://forms.gle/PwmV2JLMX2HY2uq2A ( குழுவாக பங்கேற்பாளர்களுக்கான படிவம் )
நீங்கள் Google படிவத்தை பூர்த்தி செய்தவுடன் கட்டணம் செலுத்துவதற்கான விவரங்கள் தனித்தனியாக உங்களுக்கு அனுப்பப்படும்.