டை சென்னை – நெருக்கடி உதவி மையம் 

ஒரு தொழில்முனைவராக உங்கள் மனதில் இரண்டு விதமான சிந்தனைகள் இந்த நெருக்கடி நேரத்தில் எழலாம் . 

கேள்வி-1 : இந்த வைரஸ் என்னையும் என்ன அன்புக்குரியவர்களையும் தாக்குமா ?

கேள்வி -2 : இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில் நான் எனது வணிகத்தை நிலைநிறுத்துவது எப்படி ?

இரண்டாவது கேள்வியான வணிக நிலைநிறுத்தலுக்கு “நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ?” என்ற எனது முந்தைய பதிவில் சொல்லி இருக்கிறேன் . முதல் கேள்விக்கான பதிலை மேற்கொண்டு பார்ப்போம் .
சாதாரணமாக  தினசரி வாழ்வில் பயம் மற்றும் பதட்டம் கலந்த எண்ணங்கள் பலமுறை நம்மில் பலருக்கும் தோன்றி இருக்கும், நாம் இதை பற்றி வெளிப்படையாக பேசினாலும் பேசாவிட்டாலும் , நமது செயல்களை  வைத்து பிறர் நம்மை எடை போட்டு இருக்கக்கூடும் . ஆனால் , இந்த வைரஸ் பற்றிய கேள்வி நம்மில் எழும்போது பயம், கவலை போன்ற சக்தி வாய்ந்த உணர்ச்சிகளுக்கு  நம்மையும் அறியாமல் இடம் தருகிறோம் . சமூக வலைத்தளங்களான Facebook , Watsapp மற்றும் தொலைக்காட்சி செய்திகளும் நமது கவலையையும்  பயத்தையும் மேலும் அதிகரிக்கின்றன அல்லது தூண்டுகின்றன .
ஆக வேண்டியதை பார்ப்போம் …”இந்த வைரஸ் என்னையும் என் அன்புக்குரியவர்களையும் தாக்கினால் நான் என்ன செய்ய வேண்டும் ?” என்ற கேள்விக்கு நம்மை நாம் தர்க்கரீதியாகவும் மற்றும் மனரீதியாகவும் தயார் செய்து கொள்ளல் வேண்டும் .  இந்த வைரஸ் தொற்று வராமலும் , பரவாமலும்  இருப்பதற்கான வழிமுறைகளை நிபுணர்களால் வழங்கப்பட்டு  விளம்பரப்படுத்தப்பட்டும் உள்ளது . உலக மக்கள் பெரும்பாலோர் கைகளை கழுவுதல் , முகத்தை தொடாமல் இருத்தல், பொதுவெளிகளில் கூடாமலும் கூட்டங்களை தவிர்த்தும் , முகமூடி அணிதல் (தொற்று இருந்தால்), சமூக விலகல் ஆகிய தடுப்பு முறைகளை பின்பற்றி வரும் வேளையில்  “நாம் செய்ய கூடியது ஏதாவது இருக்கிறதா?” .சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த தொற்றை தடுப்பதற்கும் மேலும் பரவாமல் இருப்பதற்கும் , மேற்கூறிய வழிகளே சிறந்தவை என்ற அவர்களின் அனுபவ பாடத்தை கொண்டு உறுதிப்படுத்தியுள்ளன .எனவே தற்போதைய சூழ்நிலையில் இந்த நடவடிக்கைகளை பின்பற்றி நம்மால் செய்யக்கூடியவற்றை சிறப்பாக செய்வோம் ..ஆனாலும் பயமும் பதட்டமும் நீடிக்கிறது .

“ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப 

கோடியு மல்ல பல “ 

(ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறியாமல்,  வீணீல் எண்ணுவன அனைத்தும் வீணே) என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப , சமூக வலைத்தளத்தில் மற்றும் நம் காதிற்கு பிறர் மூலம் எட்டும்  எல்லா செய்தியும் உங்களை கை கழுவ தூண்டினால் , உங்கள் மனதை ஆராய்ந்து , பயம் பதட்டம் போன்ற உணர்வுகளை நிவர்த்தி செய்ய மற்றும் கையாள்வதற்கான வழிகளை பற்றுங்கள் . இந்த இரண்டு உணர்ச்சிகளும் நீடித்தால் உங்களின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிவிடும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். இரண்டாம் உலக போரின் திரைப்படங்களை நாம் அனைவரும் பார்த்து இருப்போம் . அதில் ஜெர்மானிய நாஸி படைகளின் ரகசிய போலீசிற்கு (Gestapo) பயந்த யூத மக்கள் அடித்தளங்களிலும் , பாதாள அறைகளிலும் மறைந்து இருப்பார்கள் . அவர்கள் அனுபவித்த பயத்தையும் பதட்டத்தையும் நாம் இப்போது உணரலாம் . உண்மையில் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே . இங்கே நாம் நம்மை ரகசியமாக தாக்கும் வைரஸ் ( Gestapo) நினைத்து போராடுகிறோம் .
பயம் பதட்டம் போன்ற உணர்ச்சிகளின் மூன்று  பரிமாணங்கள் என்ன ?

1. அதிர்வெண் அல்லது அதிரலைகள் : Frequency – ஒவ்வொரு சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் எவ்வளவு தூரம் உங்களை தொந்தரவு செய்கின்றன .

 2. தீவிரம் – Intensity : இந்த உணர்வு வெளிப்பாட்டின் தீவிரம் மிக வலிமையானதாகவும் , வருத்தப்படத்தக்கதாகவும் , பயத்தை வலுவாக்குவதாகவும் இருக்கின்றது .

3- காலஅளவு – Duration : மேற்கூறிய உணர்வுகள் நீடித்தலின் காலஅளவு ஒரு முழு நாள் , 15-20 நிமிடம் , இல்லை உடனடியாக நம்மால் வெளி வரமுடிகின்றதா என்பது ஆகும் . 

எனவே இந்த 3 பரிமாணங்களை குறைப்பதற்கான வழிகளில் கவனம்  செலுத்துங்கள். எவ்வாறு இதை பின்பற்றலாம் என்பதற்கு சில குறிப்புகள் :

நம் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள் , நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் . இதில் சில விஷயங்களான (எ .கா ) வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது, எத்தனை நாடுகள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், தடுப்பூசி கிடைக்காதது, கட்டாய லாக் டௌன் , பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலை போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை மறந்து விடுவோம்
 நம் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களான – சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துவது, நம் அன்புக்குரியவர்கள் மற்றும் நம் தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் ஊழியர்கள், பணிப்பெண்கள், காவலாளிகள், டெலிவரி பாய்கள் மற்றும் பலரின் மேல் கவனம் செலுத்தி , தொற்றை பரவாமல் தடுப்போம் .ஒரு கவலையான எண்ணம் இப்போது உங்கள் மனதில் நுழைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதை கற்பனை செய்து கவலைப்படுகிறீர்கள், அல்லது பயப்படுகிறீர்கள் என்பதை ஒப்புக் கொண்டு, உங்கள் எண்ணங்களை மற்ற செயல்களுக்கு நகர்த்தப் போகிறீர்கள் என்று முடிவு செய்தால், குழப்பமான எண்ணங்களின் அதிர்வெண், தீவிரம் மற்றும் காலம் குறையும். கூடுதலாக, நீங்கள் சமூக வலைத்தளம் (நான் செய்ததைப் போல) உங்களைத் தூர விலக்கிக் கொள்ள முடிந்தால், குழப்பத்தை உருவாக்கும் தூண்டுதல்களை நீங்கள் நிச்சயமாக அகற்றுவீர்கள். நான் சுவாமிஜி இல்லை. நான் மனக் கட்டுப்பாட்டு நிபுணர் இல்லை. உங்களில் பலரைப் போலவே, அதே எண்ணங்களும் உணர்ச்சிகளும் கொண்ட ஒரு சாதாரண மனிதன். என் மனதில் ஓடிய எண்ணங்களையும், அதை நான் சமாளித்த வழிகளையும் பகிர்ந்துள்ளேன். COVID-19 மற்றும் அதன் தாக்கத்தை பார்த்து எனது வணிகம், குடும்பம் , சுற்றம் சூழல் , என் நண்பர்கள் குறித்து ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் கவலைக்கொண்டேன் .நான் இப்போது கவலைப்படவில்லை. வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சிறந்த நடைமுறைகளையும் பின்பற்றி, என்னால் செய்யக்கூடிய எல்லாவற்றையும், என் திறனுக்கு ஏற்றவாறு, என் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாவற்றையும் செய்கிறேன் என்பதை நான் அறிவேன். நாம் ஒவ்வொருவரும் இந்த வைரஸைச் சுற்றியுள்ள குழப்பமான எண்ணங்களிலிருந்து விடுபட முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், மேலும் அடுத்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த சூழ்நிலையை அடைய நம் மனதை வலிமையாக வைத்திருக்கிறேன். COVID-19 என்ற சோதனையை மக்களாகிய நாம் ஒரு தனிநபராக, ஒரு பொறுப்புள்ள குடிமகனாக – ஒரு தனிநபராகவும் , நாட்டின் குடிமகனாகவும் உங்களது முழு பங்கை அளித்து  சாதனையாக   மாற்றுங்கள் .இது  நமது மனவலிமைக்கான சோதனை – இந்த சூழ்நிலையில் சிறந்ததைச் செய்து -நமக்கும் சமூகத்தின் மற்றவர்களும் அவரவர் திறனுக்கு ஏற்றவாறு எதிர்த்துப் போராடி , அதன் முடிவில் வலுவாக வெளிப்படுவோம்.

https://chennai.tie.org/crisis-help-desk/

இப்படிக்கு , J. கிருஷ்ணன் சார்ட்டர் உறுப்பினர்- டை சென்னை

.நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி – யூனிமிட்டி சொலுஷன்ஸ் .

Leave a Comment