தமிழகம் முழுவதும் தொழில்முனைவை ஊக்குவிக்க டை சென்னை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்முனைவை ஊக்குவிப்பது  மட்டுமல்லாமல், தொழில்களுக்கு அடுத்தகட்ட வாய்ப்புகளை வழங்குவதிலும் சூழல் உருவாக்குவதிலும் டை பொறுப்பேற்றிருக்கிறது.

டை உறுப்பினர்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்பினை டை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் டை சந்தை.

பண்டமாற்று முறை காலம் முதல் இ-காமர்ஸ் காலம் வரை, எந்த காலமாக இருந்தாலும் பொருட்களை சந்தைப்படுத்துவது என்பது தவிர்க்க முடியாது. இதன் மூலமே புதிய வாடிக்கையாளர்களை தொழில்முனைவோர்கள் கண்டறிகின்றனர்.

உங்கள் பொருட்கள்/சேவைகளை டை சந்தை மூலம் பிரபலப்படுத்தும்போது மற்ற தொழில்முனைவோர்கள், ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் என அனைவரையும் சென்றடைய முடியும்.

உங்கள் பொருளை / சேவையை விற்பனை செய்வது மட்டுமல்ல, அவற்றுக்கு சந்தையில் இருக்கும் தேவை எவ்வளவு என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment