டை அமைப்பின் ஒரு புதிய முயற்சி `டை ரீச்’. இந்த முயற்சியில் மதுரை, திருச்சி,  ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் `சி,இ.ஒ உடன் ஒரு நாள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே ரங்கநாதன், கேரட் லேன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிதுன் சஷெட்டி, ரேஜ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் குமார்  மற்றும் செர்வியான் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரங்கராஜன் மதனகோபாலன் ஆகியோரிடம் 40-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உரையாற்றினார்கள்.

இதன் மூலம் தொழில் முனைவோர் கற்றுக்கொண்டவை:

10 நபர்கள் உள்ள நிறுவனத்தை எவ்வளவு சிறப்பாக நடத்த முடியுமோ அதே அளவு சிறப்பாக 100 நபர்கள் உள்ள நிறுவனத்தை நடத்த முடியும்.

செயல்முறையையும் கட்டமைப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் அவை நம் நோக்கங்களை சீராக்கி, தொழில் கலாச்சாரத்துக்கு அழகு சேர்க்கும்.

சரியான மேலாண்மை, தவறான மேலாண்மை என மேலாண்மை வேறுபடலாம். எந்த மேலாண்மையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும்.

அடைந்த அனுபவங்கள், பெற்ற பாடங்கள் மூலமே சரியான யுக்தியை கற்றுக் கொள்ள முடியும். யூகங்களால் அல்ல.

அதிகாரிகள் சந்திப்பின்போது விவாதிக்க வேண்டிய / தீர்மானிக்க வேண்டியவை குறித்த நிகழ்ச்சி நிரலை எப்படி தயாரிப்பது, பணியிடத்தில் அணிகளுக்கான இருக்கை ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், பணியாளர்களின் திறனை மேம்படுத்தி அவர்கள் மற்றவர்களோடு இணைந்து வேலை செய்யவைப்பதன் மூலம், எப்படி அதிக பலன்களைப் பெறுவது போன்ற யுக்திகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

Leave a Comment