நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ?

ஒரு தொழில்முனைவோராக, உங்கள் மனதில் இரண்டு விதமான சிந்தனைகள்   இந்த நெருக்கடி நேரத்தில் எழலாம் .முதல் கேள்வி .. ஐயோ இந்த வைரஸ் என்னையும் என் அன்புக்குரியவர்களையும் தாக்குமா ? இரண்டாவதாக, இந்த நிச்சயமற்ற காலத்தில் நான் எனது வணிகத்தை நிலைநிறுத்துவது எப்படி?
நான் உங்களின் இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்கிறேன் .உங்களின் வியாபாரம்/வணிகம் குறைந்து , இல்லையேல் நிறுத்தக்கூடிய சூழ்நிலையின் கட்டாயமும் , மேலும் இதனுடன் தொடர்புடைய பண புழக்கங்கள் ஒரு கடினமான நிலையை அடைந்து இருக்கலாம் . உங்களின் வாடிக்கையாளர்கள் அவர்களின் கடையை மூட அல்லது ஆர்டர்களை ரத்து செய்யும் உத்தேசத்தில் இருக்கலாம் . வாடிக்கையாளர்கள் யாரும் வராமல் உங்களின் கடையை நீங்கள் மூடி இருக்கலாம் . ஏற்கனவே போடப்பட்ட பில்களுக்கு உண்டான பண பாக்கிகள் நிலுவையில் இருக்க , புது ஆர்டர்கள் ஏதும் இல்லாமல் சரக்குகள் அப்படியே கோடௌனில் தங்க நேரிடலாம் . உங்களுக்கு விற்பனை செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பண பட்டுவாடா செய்யமுடியாத நெருக்கடி ஏற்படலாம் . இது போன்ற ஏகப்பட்ட ‘லாம் ‘ களுக்கு என்ன தான் தீர்வு ?
இப்பொழுது இவை அனைத்தும் போக ஒரு மிக பெரிய சவால் …
ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது எப்படி? இதர செலவுகளான வாடகை , மின்சாரம், இணையதளம் போன்றவற்றை சமாளிப்பது எப்படி ? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
மேற்குறிப்பிட்ட நிலையில் உங்களின் செயல் திட்டங்கள் தேவைப்படாது, உதவவும் உதவாது . இது மேலும் ஒரு புத்திசாலித்தனமான யோசனைக்கான நேரமும் கிடையாது . இந்த பேரிடர் காலம் உங்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள் . இது’உலகத்தின் மிக பெரிய போயிங்ஸ் முதற்கொண்டு சிறிய தொழில்முனைவோர்கள் , தினசரி சம்பளம் வாங்குபவர்களையும் கூட பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் . சரி , இந்த சூழ்நிலையை கையாள்வது எப்படி ? முதலில் இந்த இக்கட்டான நேரத்தில் உங்களின் நேர்மை,மனவலிமையுடன் அனைவரையும் சந்தித்து பேசுங்கள் . அனைவருடன் என்றால் உங்கள் கஸ்டமர்கள் , வாடிக்கையாளர்கள் , ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , வங்கி பணியாளர்கள் , சுற்றம் சூழலில் இருப்பவர்கள் , நில உரிமையாளர்கள் போன்றவர்கள் . போன் அழைப்புகள் , மெயில் ,மெசேஜ் போன்றவற்றில் பதில் வராது என்று தெரிந்து இருந்தாலும், உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளை கேளுங்கள் . சிலர் பதில் அளிக்கலாம் அல்லது விளக்கங்கள் தரலாம் . நீங்கள் பணம் தரவேண்டியவர்களை , நீங்களே முந்தி கொண்டு அழைத்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளை எடுத்து கூறி சில கால அவகாசம் கேளுங்கள் . மிக பொறுமையாக ஆனால் நேர்மையுடன் நீங்கள் தரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வெகு விரைவில் செட்டில் செய்யப்படும் என்று உறுதி அளியுங்கள் . ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தர முடியவில்லை என்றால் , மீண்டும் அவர்களை அழைத்து பேசி, தாமதித்திற்கான சுய விளக்கம் சொல்லுங்கள் . உங்களது நேர்மையான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் அழைப்புகளை தவிர்க்காமல் பதில் சொல்வதால் , பலர் உங்களை மிக சரியாக புரிந்து கொள்வார்கள் .நில உரிமையாளர்களை சந்தித்து வாடகை மற்றும் இதர பாக்கிகளுக்கு கால அவகாசம் கேட்கலாம் .
அப்பாடா !!!! ஒரு சிறிய ஆசுவாசம் .
இவை அனைத்தும் செய்த பிறகு … வங்கிகளை தொடர்புகொண்டு தொழிற்கடன் , மாத தவணை தள்ளுபடி அல்லது ஒத்திவைத்தல் , வட்டி குறைப்பு பற்றி பேசினால் , உங்களின் பணத்தேவை அல்லது பணமுடக்கம் இல்லாமல் வியாபாரம் /வணிகத்தை தொடர்வதற்கான வழிமுறைகளை சொல்ல வாய்ப்புகள் நிறைய உள்ளது .பயன்பாட்டு நிறுவனங்களுக்கு இது போன்ற நெளிவு சுளிவுகள் அவசியமே . எல்லோரிடமும் பேசும் பொழுது ஒரு புதிய உத்தியோ அல்லது கூடுதல் பதில்கள் கிடைக்கலாம்.

மற்றொரு குழுவான ஊழியர்களை பற்றி சிந்திக்கும் நேரம் இது .
அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பு உங்களையே சாரும் . ஊழியர்களுக்கான சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் அவர்கள் சந்திக்கும் சிரமங்களை நீங்கள் அறிவீர்கள். எனவே அவர்களை  நேர்மையுடன் அணுகி , தற்போதைய வணிக சூழ்நிலையைப் மற்றும் கடினங்களை  பகிர்ந்து கொண்டு , பண வரவின் போது அவர்களின் சம்பளத்தை எல்லாருக்கும் சமமாக பகிர்ந்து தருவேன் என்று உறுதி அளியுங்கள் .(என்னுடைய நண்பர் ஒருவர் தனது ஊழியர்களைச் சந்தித்தார் – அவர்கள் மொத்தம் 5 பேர் – முதல் வரவாக ஒரு லட்சம் ருபாய் நிறுவனம் பெறுகிறது   என்றால் ஆளுக்கு ரூ .20,000 தரப்படும் என்றும் , மேலும் நிறுவனம் அதிகமாகப் பெற்றால், மீதமுள்ள சம்பளம் சரி விகிதமாக பகிர்ந்தது அளிக்கப்படும் என்பதை அறிவித்தார் ). உண்மையாக இந்த சூழ்நிலையை சரி செய்யவும், அவர்களது சம்பள பட்டுவாடா சரிவர நடக்கவும் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடையுங்கள் . செலவுகளை சுருக்கி , அனாவசியம் அனைத்தையும் தவிருங்கள் (உதாரணத்திற்கு : AC க்கு பதிலாக மின்விசிறியை பயன்படுத்துங்கள் ).ஒரு சிறந்த போராளியாக மாறி தனிப்பட்ட மற்றும் வணிக வாழ்க்கையை சீர் அமையுங்கள் .
நம் மனதை மிஞ்சிய ஆசான் இல்லை. நமது அரசாங்கம் சரியான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரலாம் . இதுவும் கடந்து போகும் , சீராகும் என்ற நம்பிக்கையுடன் சோர்வுறாமல் உங்களால் முடிந்ததை தவறாமல் முயற்சியுங்கள் . வங்கிகள் மேலும் சில பல சலுகைகள் தர முன்வரலாம் . யாரோ சொன்னது போல “COVID -19” என்ற சோதனையை ஒரு தனிநபராகவும் , நாட்டின் குடிமகனாகவும் உங்களுது முழு பங்கை அளித்து  சாதனையாக   மாற்றுங்கள் .
முதல் கேள்வி மிக விரைவில் பதில் அளிக்கப்படும் .
  

இப்படிக்கு 

J.கிருஷ்ணன் CHARTER MEMBER – டை சென்னை 

நிர்வாக இயக்குனர் & முதன்மை செயல் அதிகாரி –

யூனிமிட்டி சொலுஷன்ஸ் 

. https://chennai.tie.org/crisis-help-desk/

1 Comment

Royal CBD

An intriguing discussion is worth comment. I do believe that you should publish
more on this topic, it might not be a taboo matter
but typically people don’t discuss these issues.
To the next! Cheers!!

March 26, 2020 - 5:43 pm Reply

Leave a Comment