1) தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள உணவு வணிக தொடர்புகளை  அணுகுவது எப்படி?

பதில் :  NRAI போன்ற தொழில் நிறுவனங்கள் மூலமும், தவிர உள்ளூர் தொடர்புகள் (LOCAL CHAPTERS) மூலமும் உணவு வணிக தொடர்புகளைஅணுகலாம் .

2) எங்களது சேவைகள் , தயாரிப்புகள்  மற்றும் கணினி சான்றிதழ் தேவைப்படும் startup மற்றும் SME களை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் ?

பதில் : A)  TiE மற்றும் அதன் போன்ற நிறுவனங்களை அணுகுங்கள் .
                B) ஒரு கிளஸ்டருடன் தொடங்குங்கள். எந்தவொரு தொழிற்பேட்டையிலும்(INDUSTRIAL ESTATE)உள்ள அரசு அலுவலகத்தில் ,அங்கு இயங்கும் அனைத்து தொழில் பற்றிய விவரங்கள் இருக்கும்.சாத்தியமான வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதற்கான முதல் பட்டியலை அங்கிருந்து தேர்வு செய்யலாம். 

3) ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கும் பொழுது (WORK FROM HOME). எனது புரோகிராமர்  குறியீட்டை நகலெடுக்கவோ பதிவிறக்கவோ செய்யவில்லை என்பதையும், அதை தவறாகப் பயன்படுத்தவில்லை எப்படி உறுதி செய்வது, மேலும் இந்த சவாலை எதிர்கொள்வது எப்படி ? ACCENTURE, TCS போன்ற நிறுவனங்கள் இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்கின்றனர் ?

பதில்:   சரியான கையொப்பமிடப்பட்ட வேலை வாய்ப்பு ஒப்பந்தம் உங்களிடம் இருப்பதை உறுதி செய்வதே முதல் படி. உங்களிடம் இது இல்லையென்றால்,உடனடியாக ஒப்பந்தங்களை தயார் செய்யுங்கள் .அறிவுச்சார் சொத்துக்களைப் ( Intellectual Property) பாதுகாக்கவும் மேலும் சாதாரண நடைமுறைக்கும்  இதுவே 90% சிக்கலை தீர்க்கும் வழிமுறையாகும் .இதைக் கையாளும் ஐடி பாதுகாப்பு செயலிகளை பயன்படுத்தி USB PORTS , CD போன்றவற்றை நீங்கள் முடக்கலாம். மென்பொருளை மின்னஞ்சல் செய்வதை தடுக்கலாம். ஒரு முறை சோதிக்கப்பட்ட முறை CITRIX அல்லது AWS பணியிடத்தைப் பயன்படுத்தி இதை நீங்கள் இன்னும் உறுதி செய்யலாம் .

4) வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்தித்திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

பதில் : A) காலை மற்றும் மாலையில் , அல்லது உங்கள் இருவருக்கும் வசதியான நேரங்களில் skype        
                      zoom’இல்  தொடர்புகொள்ளுங்கள் .
                B) அன்றைய தினத்திற்கான பணியினை அவர்களுக்கு தெரிவித்து, நாளின் முடிவில் அதற்கான
                        முடிவு மற்றும் விளைவுகளை அறியலாம் . செயல்முறையிலிருந்து அவர்களை அடிப்படை தேவைகளை முதலில் செய்யும் முறைக்கு மாற்றுங்கள் .
                C )சில தவறுகள் இருக்கலாம் ,  கவலைப்பட வேண்டாம்! ஒரு நாளில் முடிக்க வேண்டிய குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கி அவர்களின் அடிப்படை செயல்திறனை ஆய்வு செய்யுங்கள்.  ஊழியர்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்வதற்கான முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் .அவர்களின் ஆலோசனையை கேட்டு , இத்தருணத்தை ஒரு குழுவாக வெற்றிகரமாக செய்து முடியுங்கள்.

5. இந்த இக்கட்டான பேரிடர் சமயத்தில் எனது தொழிலை நிலைநிறுத்துவது எப்படி ?

பதில் : வணிகத்திற்கான செலவை குறைத்து ,வருங்கால வருமானம் மற்றும் செலவினங்களை மதிப்பிடுவதற்கும் திட்டமிடுவதற்கும் பட்ஜெட் அமைத்து அதை நடைமுறைப்படுத்துங்கள். எங்கே எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்யுங்கள் .

6) வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புகளை ஆன்லைன் பயிற்சிக்கு எப்படி பெறுவது ?

பதில் : நீங்கள் மேற்கத்திய சந்தைகளைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், உங்கள் ஆன்லைன் மார்க்கெட்டிங் குறித்து கவனமாக இருங்கள், ஏன் என்றால் தற்போதைய சர்வதேச சந்தை சூழ்நிலைகள் அதற்கு சாதகமாக இல்லை. பொறுமையுடன் உங்கள் brand -இன் பயன்பாடுகளை சொல்லுங்கள் , இந்த சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பின்னர் யோசனை செய்யலாம்.

 7) ஒரு ஊழியரின் செயல்திறன் மற்றும் நெருக்கடியான நேரத்தில் நிறுவனத்திற்கு தேவையான பங்களிப்பு செய்யாவிட்டால், எனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது சரியா?           

பதில் : கண்டிப்பாக இந்த இக்கட்டான காலக்கட்டத்தில்  செயல்திறன் மற்றும் நெருக்கடியான நேரத்தில் நிறுவனத்திற்கு தேவையான பங்களிப்பு அளிக்காத ஊழியரை நீக்குவது சரியான முடிவு என்றாலும் , நீங்கள் அதை ஒட்டு மொத்த வணிக திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். யாரையும் தனிமைப்படுத்தாமல் ஒரு தெளிவான செயல்முறையை வரையறுத்து , அவர்களின் செயல்திறனை ஆராய்ந்து  பிறகு யாரை நீக்குவது என்பதை நீங்கள் தீர்மானம் செய்யவேண்டும் . 

8) நான் சீனாவைச் சார்ந்த கணினி வன்பொருள்  ( Computer Hardware )வணிகத்தில் இருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய இயலாது. தேவை மற்றும் வழங்கல் இடைவெளி காரணமாக நான் முன்பு 5 தயாரிப்புகளை வாங்கிய இடத்தில் இருந்து  1 தயாரிப்பு மட்டுமே வாங்க முடிகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

  பதில் : A ) இந்த சந்தர்ப்பத்தில் சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் ,  உங்களின் சரக்கை முடிந்த அளவிற்கு பணமாக மாற்ற முயலுங்கள். மற்ற நேரங்களில்  நாம் பொதுவாக லாப கண்ணோட்டத்தில் யோசித்து, விற்பனை செய்வோம் . ஆனால் இப்பொழுது இந்த முறையை மாற்றி பண       புழக்கத்திற்கும்   ,தின நடைமுறைகள் தடை இல்லாமல் இருப்பதற்கும் சாத்தியக்கூறுகளை  ஆராய்ந்து , வாடிக்கையாளர்களை கண்டுபிடித்து இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தை தொடருங்கள் . ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை சரியாக கவனித்து பின்பற்றுங்கள் .
B )உங்களால் முடிந்ததைச் சிறப்பாக செய்யுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுடன் வெளிப்படையாகவும் மேலும் உண்மையாகவும், அவர்களுக்கு எந்த விதமான சிரமமும் தராத வகையில் சிறந்த மாற்று வழிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள் . சீனா மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி கொண்டு இருக்கிறது, எனவே வெகு விரைவில் விஷயங்கள் மேம்படுவதைக் காணலாம். நம்பிக்கையுடன் இருங்கள் .      

9) எனது ஊழியர்கள் மிகவும் முக்கியம், ஆனால் எனது வணிகம், வியாபாரம் வீட்டில் இருந்து செய்யும் முறைக்கு ஒத்து வராது. இத்தருணத்தில் எனது ஊழியர்களை காப்பது எப்படி ?

பதில் : A )ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குங்கள், உங்கள் ஊழியர்களுடன் அதிகம் பேசுங்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கையாள்வதற்கு கடுமையான விதியைச் செயல்படுத்தலாம் .காப்பீட்டை மேம்படுத்தவும், சில சலுகைகளை வழங்கவும். B)ஒவ்வொரு வணிகமும் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஆதரிக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு முழு அலுவலகத்தை இந்த நேரத்தில் செயல்பட வைப்பது மின்சாரம் மற்றும் அடிப்படை செலவுகளை அதிகபடுத்தும் . எனவே ஒரு வழி, வணிகத் தேவைகளைப் பொறுத்து வாரத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கையை 3-4 ஆகக் குறைத்து, அந்த நாட்களில் வேலை நேரத்தை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அதிகரிப்பது போன்றவை செலவை கட்டுப்படுத்துவதும் அன்றி ஊழியர்களின் பாதுகாப்பையும் அதிகரிக்க உதவும் . இப்படி பணி நேரங்களைத் மாற்றம் செய்வதன் மூலம் சமூக தூரத்தை கடைபிடிக்க இயலும் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதியாக கடைபிடிக்க முடியும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தி அதற்கான வசதிகளை செய்து கொடுங்கள்.

10) புதிய வணிகம் அல்லது பிரிவுகளை அடையாளம் காண இது சரியான நேரமா?     

பதில்: –அனைத்து இன்னல்களையும் வாய்ப்புகளாக மாற்றுங்கள். வணிக மறுசீரமைப்பு , அதற்கான வியூகங்களையும் மற்றும் புதிய உத்திகளை                       பயன்படுத்தவும் இந்த சூழ்நிலையை உபயோகியுங்கள் . செயல்பாட்டு சுமை குறைவாக இருக்கும்போது, வேறு என்ன செய்ய முடியும். இவை அனைத்திற்கும் பண தேவை மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

11) இந்த இக்கட்டான நேரத்தில் பணி மூலதனம் என்கிற மிக பெரிய சவாலை நிர்வகிப்பது எப்படி? ஆரோக்கியமான மாற்று வழிகள் என்ன ?

பதில் : 1. மூலதன தேவைகளுக்கு முதலில் மேற்கூறியது போல் ஒரு தெளிவான பட்ஜெட்டை உருவாக்குங்கள் . 2. தற்பொழுது கிடைக்கும் பல வழிமுறைகளையும்,அனுபவம் வாய்ந்தவர்களின் யோசனைகளை பின்பற்றுங்கள் . 3. வணிக மற்றும் தனி நபர் கடன்கள்,NBFC ‘ஸ் ஆகியவற்றை சிந்தித்து எடுங்கள் . 4. விற்பனையாளர்களுடன் இணைந்திருங்கள். நிறுவனத்தின் சரியான நிலையை தெளிவாக எடுத்து சொல்லி ஆலோசனை பெறுங்கள் .

12) மூலப்பொருளை குறைந்த செலவில் வாங்க முடியும் என்பதை தெரிந்திருந்தும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, வாடிக்கையாளர் வாங்கும் முறை எப்போது மேம்படும் என்று எனக்குத் தெரியவில்லை. மூலப்பொருட்களை வாங்குவது மற்றும் எதிர்காலத்திற்காக சேமிப்பது எனக்கு விவேகமானதா?

பதில் : தேவையான பணம் மற்றும் ஸ்டாக் வைப்பதற்கான இடம் போன்ற வசதிகள் இருந்தால் மட்டும் இதை பின்பற்றலாம்.ஆனால் நெகிழ்வுத்தன்மை மற்றும் மூலதனம் குறித்து ஒரு தெளிவான பார்வையுடன் யோசியுங்கள் .

13)ஒரு தொழில்முனைவோராக நான் மிகவும் மனசோர்வு அடைகிறேன், அதை நான் எவ்வாறு கையாள்வது? வணிகங்களின் வீழ்ச்சியிலிருந்து என்னை மீட்டு அதை கையாளும் திறனையும், என்னை உற்சாகப்படுத்தும் சூழ்நிலையை வரவைக்க எனது குடும்பத்துடன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமா ?

பதில் :கவலைகளை உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் எங்கு செல்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கட்டும். இதுவும் கடந்து செல்லும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள், உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு தொழில் முனைவோராக உங்களை சுய ஊக்கமளிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள் . உடல் மற்றும் மனரீதியான உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த நேரத்தைப் பயன்படுத்தவும். உங்கள் மிக பிடித்த வழிகாட்டிகளின் அறிவுரைகளை பின்படுத்துங்கள் .

14)முதலீடுகளைத் தேட இது சரியான தருணமா? ஒரு தொழில்முனைவோரிடமிருந்து முதலீட்டாளர்கள் என்ன பார்ப்பார்கள்?

பதில் : இது நிச்சயமற்ற காலமாகும், இந்த நேரத்தில் முதலீட்டாளர்களும் சில சிக்கல்களை சந்திப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், நிறுவனம் / வணிகத்தில் முன்னடைவை உருவாக்குவதற்கு இந்த காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்துங்கள், இது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்றும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தரும். முதலீட்டாளர்கள் நெருக்கடி காலங்களில் நீங்கள் எவ்வாறு அதை சமாளித்தீர்கள் என்பதை கணக்கில் கொள்வார்கள் . இந்த காலங்களில் வாய்ப்புகளைப் பார்க்கும் முதலீட்டாளர்கள்    “ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு”,என்றே இருப்பார்கள். இதற்கு ஏற்றார் போல் உங்களை செதுக்கி சரியான’முதலீட்டாளரை அடைந்து பயன்பெறுங்கள் .

15) எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஒரு தொழிலைத் தொடங்க இது சரியான நேரமா? நான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை? 

பதில் : எந்தவொரு புதிய வணிகத்தையும் தொடங்க இதுசரியான நேரம் அல்ல. நாம் அனைவரும் ஒரு நிச்சயமற்ற காலத்தில் இருக்கிறோம். ஜூன் 2020 க்குப் பிறகு நீங்கள் திட்டமிடலாம். கொரோனா வைரஸ் நிலைமை அந்த நேரத்தில் கட்டுக்குள் வரும் என்று கட்டாயமாக நம்புவோம் .
https://chennai.tie.org/crisis-help-desk/

2 Comments

Ravikumar G

Good initiative again and keeping our community in clarity by these methods.Kudos to entire team.

March 24, 2020 - 5:55 pm Reply

Rajesh

All questions answer is use ful thank u

March 24, 2020 - 5:55 pm Reply

Leave a Comment