“நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு வரவில்லை

மிக பெரிய போரின் வெகு தீவிரத்தில் இருக்கும் ஒரு அந்நிய தேசத்தின் அறிமுகமில்லா இடத்திற்கு சிப்பாய் ஒருவர் முன்னணி வரிசையில் அனுப்பப்பட்டார் . அப்பகுதியோ குளிர்ந்த வானிலையுடன் , சேற்றின் துர்நாற்றம் வீசும் அகழிகள் கொண்ட இடமாக அவருக்கு ஒரு கசப்பான மனநிலையை உண்டாக்கியது .இன்னும் சில முகமறியா துருப்புகளும் அவருடன் சேர்ந்தன .  தோட்டாக்கள் சிதறலுடன் எதிரிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினர் .  தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு , தூக்கமின்மையுடன் மிக கடினமாக மூன்று நாட்கள் சென்றன .

  அவரின் மனநிலை , என் ஊரின் வண்ணமயமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு , இராணுவத்தின் பித்தளை குண்டுகள் தாங்கிய  மயக்கும் மந்திர கதைகளை கேட்டும், உடற் மற்றும் மனவலிமை கொண்ட ஒரு தனி நபராக மாறவும் , எனது தாய் நாட்டிற்கு சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக நினைத்து அல்லவா நான் இராணுவத்தில் சேர்ந்தேன் .  ஆனால் “நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு  வரவில்லை

ஸ்மார்ட்டான சீருடை , தொப்பி , கண்ணாடி போன்ற பளபளப்புடன் முகச்சவரம் செய்த முகம் , பெண்களை மிக கவரும் என நான் கேட்ட சீனியர்களின் கதைகள்  மேலும் என்னை இராணுவத்தில் சேர தூண்டின . இராணுவ முகாமின் கஷ்டத்தின் இடையிலும் , எனது சக சிப்பாய்களின் வேடிக்கையான பேச்சு , நல்ல உணவு என்று பொழுதுகள் சில மாதங்கள் வரை நன்றாகவே சென்றன இவற்றுக்கிடையில் இந்த பரிதாப நிலையா நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு வரவில்லை “.

COVID -19

 அறிமுகமில்லாத சூழ்நிலை , குறைவான வருவாய் , பணப்புழக்கம் இல்லாமை , இருண்ட எதிர்காலம் , சமூக ரீதியான தூரங்கள் ,இம்மாதிரியான சூழ்நிலையில் பல எண்ணங்கள்  மனதில் எழுகின்றன , கவலை தோட்டாக்கள் துளைக்கின்றன . இந்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் ஒரு தொடக்க தொழில்முனைவோரின் தற்போதைய மனநிலை

 நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு  வரவில்லை” .

கன்வல் சிங் ரெஃஹி போன்ற வெற்றிகரமான தொழில் அதிபர்கள் அனைவரின் வலைத்தளங்களை படித்தும் ,  சிறந்த யோசனைகள் கொண்ட  தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் முதலீடு செய்ய  Angel Investors மற்றும் Venture Capital போன்ற முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர் என்ற மிதக்கும் மனநிலையில் இருந்தேன் . அதோடல்லாமல் Microsoft , Google போன்ற ஜாம்பவான்கள் START UP களில் முதலீடு செய்வார்கள் என்றும் , அதனால் பலர் பில்லியன்களில் சம்பாரித்து உள்ளனர் போன்ற செய்திகள் என்னை ஒரு கனவு உலகிற்கு அழைத்து சென்றன . நான் தொழில் தொடங்கிய சில மாதங்கள் /ஆண்டுகள் நிறைய ஆற்றலுடன் , சிறந்த யோசனைகள் மற்றும் செழிப்பான வாடிக்கையாளர்களுடன் மிக நன்றாகவே சென்றது . தொழிற்பயணங்கள் மூலம் பல  அனுபவங்கள் கிடைத்தன . ஆனால்  நான் இதை எதிர்ப்பார்த்து இங்கு  வரவில்லைஎன்று கவலை, புலம்புதல் இல்லாத நிஜ உலகிற்கு உங்களை வரவேற்கின்றேன் . அனுபவமே சிறந்த ஆசான் , எந்த சிக்கல்களுக்கும் உடனடி 2 நிமிட தீர்வு இல்லை , ஆனால் நிச்சயமாக தீரா சிக்கல்களும் இல்லை . நல்ல ஆழமான சிந்தனையுடன் உங்களது மனவலிமை , தன்னம்பிக்கையோடு இந்த சிக்கலான சூழலை கையாள விடாமல் முயற்சியுங்கள் . முழு திறமையோடு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த Covid -19 என்ற சோதனையை சாதனையாக மாற்றுங்கள் .

இப்படிக்கு 

J . கிருஷ்ணன் –  CHARTER MEMBER , டை சென்னை .

நிர்வாக இயக்குனர் & முதன்மை செயல் அதிகாரி  – யூனிமிட்டி சொலுஷன்ஸ் .

https://chennai.tie.org/crisis-help-desk/

Leave a Comment