உங்கள் வணிகத்தை வளர்க்க ஒரு தொழில் முனைவராக இந்த இக்கட்டான பேரிடரின் போது நீங்கள் செய்ய வேண்டியவை :

1. WORK LIFE BALANCE –  வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை .
வேலை-வாழ்வு சமநிலை என்பது ஒருவரின் வேலை அல்லது தொழிலுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்வுக்கும் (நலம், ஈடுபாடுகள், குடும்பம்) இடையேயான நேர அல்லது ஆற்றல் பங்கீட்டைப் பற்றிய கருத்து. நம்மில் பலர் இதை உதாசீனப்படுத்துகின்றோம். நேரத்தை கையாள கற்றுக்கொண்டு ஒரு தரமான வாழ்க்கையை உருவாக்க இந்த சூழ்நிலையை உபயோகியுங்கள்.

2. REDUCING THE COST OF BUSINESS –  வணிகத்திற்கான செலவை குறைத்தல் .
வருங்கால வருமானம் மற்றும் செலவினங்களை மதிப்பிடுவதற்கும் திட்டமிடுவதற்கும் பட்ஜெட் அமைத்து அதை நடைமுறைப்படுத்துங்கள் .எங்கே எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை திட்டமிட இந்த சூழ்நிலையை உபயோகியுங்கள் .

3. BUSINESS RECONSTRUCTION –  வணிக மறுசீரமைப்பு.
உங்களின் வணிகத்தையும் அதற்கான வியூகங்களையும் மற்றும் புதிய உத்திகளை பயன்படுத்தவும் இந்த சூழ்நிலையை உபயோகியுங்கள் .

4. TAKE CLIMATE FOR EXAMPLE – கால நிலையை உதாரணமாக எடுத்து கொள்ளுதல் .
ஒரு சிறிய உதாரணம் : காற்று அடிக்கும்பொழுது மாவும் , மழை அடிக்கும்பொழுது உப்பும் விற்று பயன் இல்லை . ஆகவே  கால மாற்றங்களை கவனத்தில் கொண்டு உங்களின் வணிகத்தை திட்டமிட இந்த சூழ்நிலையை உபயோகியுங்கள் .

5. THINKING  ABOUT OUR  TALENT –  நமது திறமையை சிந்தித்து உணர்தல் .
எந்த துறையிலும் வெற்றி பெற அந்தத் துறைக்கு தேவையான திறமை நம்மிடத்தில் இருக்கிறதா என்பதை சிந்தியுங்கள் . அப்படி இல்லை என்று தோன்றினால் அதற்கு உண்டான  திறமை மேம்பாடுகளை வளர்த்து கொள்ள இந்த சூழ்நிலையை உபயோகியுங்கள் .

6.  WORKING TOGETHER ON TIME-  அனைவரும் சரியான நேரத்தில் சேர்ந்து பணி செய்தல் .
நீங்களும் உங்கள்  அணி உறுப்பினர்களும் சரியான நேரத்தில் வேலையை தொடங்க பழக்கி , நீங்களும் பழகுங்கள் . எனவே காலம் தவறாமையும், காலத்தை நிர்வாகம் செய்யும் திறனையும் இந்த சூழ்நிலையின் போது தவறாமல் கடைபிடியுங்கள்.

https://chennai.tie.org/crisis-help-desk/

Leave a Comment